ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி : போலந்தை வீழ்த்தி …. காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா ….!!!

12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது .இதில் பங்கேற்றுள்ள மொத்தம் 16 அணிகள் 4  பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.இதில் நேற்று நடந்த’ பி ‘பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா-போலந்து அணிகள் மோதின.

இதில் இந்திய அணி துணை கேப்டன் சஞ்சய் 2 கோல்,ஹூண்டால் 2 கோல், சிர்மாகோ 2 கோல், உத்தம் சிங் மற்றும் சர்தானந்த் திவாரிஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார் .இறுதியாக 8-2  கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது .இதன் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ,பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *