ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: வெல்வபோவது யார் …..? ஜெர்மனி – அர்ஜென்டினா மோதல் ….!!!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில்  ஜெர்மனி – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில்  ஜெர்மனி – அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் நடந்த லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத ஜெர்மனி காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் அணியையும், அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது .அதேசமயம் லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணியிடம்2-3  என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்தது.

இதனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் அர்ஜென்டினா அணிகளமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .இதற்கு முன்னதாக இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ள 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா – பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் முதல் லீக் ஆட்டத்தில் 4-5 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த இந்தியா இதற்கு பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *