ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி : பிரான்ஸை வீழ்த்தியது அர்ஜென்டினா….! இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்பை தவற விட்டனர் .

இதனால் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .எனவே  பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.இதில் அர்ஜென்டினா அணி 3 கோலும், பிரான்ஸ் அணி ஒரு கோல் அடித்தது .இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *