“ஜூன் 3_இல் பள்ளிகள் திறக்கப்படும்” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…..!!

தமிழகத்தில் ஜூன் 3_ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்பதில் எந்த மாற்றமுமில்லை என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும்.

தொடர்புடைய படம்

அதே போல இந்தமுறையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை , திட்டமிட்டபடி ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாக  கூறி இருந்தார். ஆனாலும் பள்ளி திறப்பு தள்ளி போகிறது என்று பொதுமக்களிடமும் , மாணவர்களிடமும் வதந்தி பரவி வந்த நிலையில் மீண்டும் அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதி பட கூறியுள்ளார்.