2 முறை மறுத்த நீதிபதி.. ”மீண்டும் தலைமை நீதிபதி” …ப.சிதம்பரம் முறையீடு…!!

ப.சிதம்பரம் முன்ஜாமீன் மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் முடிவு செய்துள்ளனர்

நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்ததையடுத்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக மேல்முறையீட்டு மனுமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை  விசாரிக்க முடியாது என்றும் , உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.

Image result for Justice Ramana,

இதையடுத்து தலைமை நீதிபதியிடம்  ப.சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞ்சர் கபில் சிபில் சார்பில் முறையிட்ட போது அவர் அயோத்தி வழக்கை விசாரித்திக் கொண்டு இருந்ததால் அவசர வழக்காக விசாரிக்க  மறுத்தார். இதை தொடர்ந்து கபில் சிபல் 2 மணிக்கு வேறு வழியே இல்லாமல் நீதிபதி ரமணன் முன்பு மீண்டும் முறையிட்டார். அதில் எங்களுக்கு வேறு வழியில்லை அதனால் மீண்டும் உங்களிடம் வந்துள்ளோம் என்று முறையிட்டார். அப்போது நீதிபதி ரமணா  நீங்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் பிழை இருப்பதாக பதிவாளர் குறிப்பிட்ததாக கூறி பதிவாளரை அழைத்து  பல்வேறு கேள்விகளை கேட்டார்.

Image result for Ranjan Gogoi

அப்போது பதிவாளர் அவர்கள் மனுவில் குறைகள் சரி செய்யப்பட்டு விட்டது எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது என்று தெரிவித்தார்.ஆனால் பட்டியலிடாத வழக்கை எப்படி நாங்கள்  எடுத்துக்கொள்ள முடியும் நீதிமன்றத்திற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது.அதற்கு உட்பட்டு தான் நாங்கள் செயல்பட வேண்டும். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தான் முடிவு எடுப்பார் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன் எனவே நான் இந்த வழக்கை  விசாரிக்க முடியாது என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.  இதனால் அதிர்ச்சியடைந்த ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் மாலை 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் மீண்டும் முறையிட இருக்கின்றார்கள்.