நீதிபதி ஓபி.ஷைனி வழக்குகள் மாற்றம்- டெல்லி உயர்நீதிமன்றம்…!!

நீதிபதி ஓபி.ஷைனி விசாரித்த 2ஜி வழக்கு மட்டுமின்றி ஏர்செல்-மேக்சிஸ் உட்பட அனைத்து வழக்கும் நீதிபதி அஜய்குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி ஓபி.ஷைனி அவர்கள் 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகின்றார். ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் 2ஜி வழக்கின் கீழ் தான் வருகின்றன.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் வரும் இன்னும் 15 நாட்களில் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இதனையடுத்து விசாரித்து வந்த 2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளும் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரக்கூடிய அஜய்குமார் குஹர்  அமர்வுக்கு மாற்றப்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே இந்த ஏர்செல்-மேக்சிஸ் தொடர்பான வழக்குகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் சம்பந்தப்பட்ட அந்த வழக்குகள் எதையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட போது வேறு நீதிபதிக்கு  மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இருக்கக்கூடிய  அஜய்குமார் குஹர் அமர்வு மாற்றப்பட்டுள்ளது.