“ஆப்கானிஸ்தானில் பயத்துடன் வாழும் பத்திரிக்கையாளர்கள்!”.. தொடர்ந்து அத்துமீறும் தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிக்கையாளர்களை சித்திரவதை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து நாட்டில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், நாட்டிலுள்ள பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். நாட்டில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை, தலீபான்கள் சிறை வைத்து கடுமையாக தாக்கினர். அவர்களின் காயங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் பத்திரிகையாளர்கள் தலிபான்கள் மீது அதிக பயத்துடன் இருக்கிறார்கள். மேலும், பத்திரிகையாளர்களின் கேமரா உட்பட பல கருவிகளை தலிபான்கள் திருடிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், இரு தினங்களுக்கு முன்பு துபான் ஓமர் என்னும் பத்திரிகையாளரை  தலிபான்கள் கொன்றுள்ளனர். மேலும், நாட்டில் தலிபான்களை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிக்கவும், பத்திரிக்கையாளர்களுக்கு தடை அறிவித்துள்ளார்கள்.