இந்திய காவல்துறை அதிகாரிகள் பணியின் போது தங்கள் பெயர் மற்றும் பதவியைக் குறிக்கும் பேட்ஜ்களை அணிய வேண்டும். இந்த நடைமுறையானது பொது நம்பிக்கை மற்றும் அடையாளம் காணல் போன்ற பல நோக்கங்களுக்கு உதவுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம்  ஜான்பூரில் காவல் அதிகாரி ஒருவர், அவரது பெயர் பொறிக்கப்பட்ட பேட்ஜ்ஜை அணியவில்லை. இதனால் பத்திரிக்கையாளர் ஒருவர், அந்த காவல்துறையினரிடம் கட்டாயத் தேவையான பெயர் பேட்ஜ் அணியாததை குறித்து கேள்வி கேட்டார்.

அதற்கு அந்த காவல் அதிகாரி கோபத்துடன் பதில் அளித்தார். இவ்வாறு தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,  இதற்கு மற்றொரு காவல் அதிகாரி, தனது பெயரை பொறுக்கப்பட்டிருந்த பேட்ஜ்ஜை காட்டியுள்ளார். அந்த பத்திரிக்கையாளர் மீண்டும், ஏன் இந்த அதிகாரி பெயர் பேட்ஜை அணியவில்லை என்று கேள்வி கேட்டார். அதற்கு ஆத்திரமடைந்த காவல் அதிகாரி பத்திரிக்கையாளரை அறைந்து அவரை திட்டினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.