நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துறையில் வேலை – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் வேலை பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வளைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான நிலக்கரி சுரங்கத் துறையில் வேலைக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை: மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் வேலை.

காலியிடங்கள் : மொத்தம் 95.

மைனிங் சர்தார் – 88 இடங்கள்,
சர்வேயர் – 7 இடங்கள் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி:

  • மைனிங் சர்தார் வேலைக்கு 10வது படிப்புடன் மைனிங் வேலையில் சான்றிதழ் படிப்பு, கேஸ் டெஸ்டிங் தேர்ச்சி மற்றும் ஃபர்ஸ்ட் எயிட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சர்வேயர் வேலைக்கு 10வது படிப்புடன் சர்வேயர் வேலையில் சான்றிதழ் படிப்பு மற்றும் சி.எம்.ஆர் சான்றிதழ்
    பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.3.2020

மேலும் தகவல்களுக்கு:  http://www.nclcil.in/page.php?pid=34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *