மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் சயின்டிபிக் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் , சப் இன்ஸ்பெக்டர் (பையர்) மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ் எஸ் சி நடத்துகிறது. இத்தேர்வு மூலம்1,300-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது :
இதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
குறிப்பு : பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு
கல்வித்தகுதி :
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு முதல் அதிகபட்ச கல்வி தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதியில் மாற்றம் உண்டு.
விண்ணப்பம் :
ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் ஆகஸ்ட் 6_ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31_ஆம் தேதி மாலை 5 மணி என வரையறுக்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள இணையத்தில் விண்ணப்பிக்கலாம்:
https://www.ssc.nic.in/
https://www.sscsr.gov.in/
தேர்வு மற்றும் கட்டணம் :
தேர்வு கட்டணம் ஆன்-லைன் மூலமாக செலுத்தினால் செப்டம்பர் 2_ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்வு கட்டணம் செலுத்தலாம். வங்கி ரசீது மூலம் செலுத்தினால் செப்டம்பர் 4_ஆம் தேதி வரை செலுத்தலாம். தேர்வு கட்டணம் எஸ்சி / எஸ்டி பிரிவினர் , பெண்கள் , மாற்றுத் திறனாளிகள் , முன்னாள் இராணுவத்தினருக்கு கிடையாது . பொது பிரிவினர் ஆண்களுக்கு 100 ரூபாய் தேர்வு கட்டணமாகும் .
தேர்வு நாள் : கணினி வழித் தேர்வாக 14 .10.2019 முதல் 18.10.2019 வரை நடைபெறும்
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வலைத்தளத்தை பயன்படுத்தவும்