சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக விதிகளுக்கு மாறாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையிலும், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சி தம்பி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்ரோஸ் ஞான அற்புதராஜ், குமரேசன் போன்றோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
மாநில தலைவர் மணிமேகலை இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியுள்ளார். மேலும் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொது செயலாளர் சேது செல்வம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.