“என்னுடைய கணவர் ஒரு விஞ்ஞானி”… அப்படியா… மனைவிக்கு நேர்ந்த ஷாக் ..!!

டெல்லியில் ஒரு இளைஞர் விஞ்ஞானி என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்த  ஆராய்ச்சி மாணவி அதிர்ச்சியடைந்தார். 

டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு  ஜிதேந்தர் சிங் என்ற இளைஞர் ஒருவர்  அறிமுகமானார்.  இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் போது மாணவியிடம் தான் ஒரு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார்.

Image result for love

இதை நம்பிய  அந்த  மாணவி அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டார்.  மேலும் போலியான அடையாள அட்டையும் காண்பித்துள்ளார். இதனால் அப்படியே அந்த மாணவியின் முழுவதுமாக நம்பிவிட்டார் அந்த மாணவி. அதன்பிறகு இருவரும் காதலித்து வந்த நிலையில், பின்னர் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில்  திருமணம் செய்து கொண்டனர்.  திருமணமான பின் தன்னுடைய கணவர் விஞ்ஞானி என்று தனது தோழிகளிடம் எல்லாம் அந்த மாணவி பெருமையாக கூறி வந்துள்ளார்.

Image result for Jitender Singh, a young man, married a woman who claimed to be a research student from Delhi.

இந்நிலையில் தான் அவர் யார் என்று அவருக்கு தெரிந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது அந்த இளைஞர் வேலை இல்லாமல் இருப்பது தெரியவர அதிர்ச்சி அடைந்தார். இது போதாதென்று மேலும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான சம்பவம் என்னவென்றால் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு தன்னை மோசடி செய்து ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாக விட்டதாக  டெல்லியில் உள்ள துவாரகா போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து  போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *