உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் – 1
சீரகம் – 2 டீஸ்பூன்
வெல்லம் – தேவையான அளவு.

செய்முறை:
முதலில் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். தேங்காயுடன் , ஊறவைத்த சீரகம் சேர்த்து அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லக் கரைசல் கலந்து , ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான ஜீரா மில்க் தயார் !!