“ஜெயலலிதாவுடன் ஒப்பிட யாருக்கும் தகுதியில்லை”…. கடம்பூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோரின் திருவுருவ சிலைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வருகை புரிந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயலலிதா உடன் தங்கள் குடும்பத்தாரை அண்ணாமலை ஒப்பிட்டு பேசியது பக்குவமற்ற பேச்சு. எங்களை பொறுத்தவரையிலும் அம்மாவுக்கு இணை அம்மாதான். அரசியலில் பல வரலாறுகளை படைத்த ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேச யாருக்கும் தகுதி இல்லை என்று அவர் கூறினார்.