மகளுக்கு நடக்கவிருந்த திருமணம்…… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாமரை நகரில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதனை அடுத்து வரும் மாதமான நவம்பரில் ராஜசேகரின் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக ஜவுளிகள் எடுப்பதற்கு குடும்பத்துடன் அனைவரும் சென்னைக்கு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜசேகரன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *