நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ்…… ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் உதவ முடிவு….!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு  உதவுவதற்காக ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களும் சம்பள பாக்கி காரணமாக  தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின்  போயிங் 737 மற்றும் போயிங்  777 விமானங்களை குத்தகை முறையில் இயக்குவதற்கு  ஏர் இந்தியா மற்றும்  ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

Image result for Jet Airways company in financial crisis

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின்  30 – 40 போயிங் விமானங்களை ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும், 5 போயிங் விமானங்களை ஏர் இந்தியாவும் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்  ஜெட் ஏர்வேஸ் நிறுவன  ஊழியர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்த 10  நாட்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானங்கள் செயல்பாட்டிற்கு வர இருப்பதாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலுள்ள ஊழியர்களின் பிரச்சனை தீரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.