‘என்னால் ஏற்க முடியவில்லை’…. சாதனை படைத்த திருநங்கைகள்…. கிரீன்ஸ் கட்சி வேட்பாளர்கள்….!!

கிரீன்ஸ் கட்சியைச் சேர்ந்த திருநங்கைகள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

ஜெர்மனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் Greens கட்சியை வேட்பாளர்களான Tessa Ganserer, Nyke Slawik என்ற இரு திருநங்கைகளும்  வெற்றி பெற்றுள்ளனர். மேலும் எங்கள் இருவரின் வெற்றி  Greens கட்சிக்கு மட்டுமின்றி  உலகில் உள்ள queer சமுதாயத்திற்கும் rans-emancipatory அமைப்பிற்கும் வரலாற்று சாதனையாக பார்க்கப்படும் என்று 42 வயதான Tessa Ganserer  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதில், ஜெர்மன் தேர்தல் முடிவுகளானது சிறப்பு மற்றும் ஏற்றுக்கொள்ள கூடிய சமுதாயத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து Gansererன் முன்னுரிமை பட்டியலில், அடையாள கோப்புகளில் உள்ள பாலியல் மாற்றத்தை உறுதி செய்வதற்கான எளிய முறைகளை கொண்டு வருவதே முதல் நோக்கமாக உள்ளது. மேலும் லெஸ்பியன் தாய்மார்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதற்கான உரிமைகளை வழங்கியுள்ள சட்டத்திருத்தை தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அதிலும் Tessa Ganserer இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து North Rhine-Westphalia தொகுதியில் வெற்றி பெற்ற  27 வயதான Slawik கூறியதில் “என்னால் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அவ்வளவு வியப்பிலும் மகிழ்ச்சியிலும் இருகிறேன்”  என்று தெரிவித்துள்ளார். மேலும் homophobia மற்றும் transphobiaவிற்கு எதிராக இருக்கும் சுயநிர்ணய சட்டம் மற்றும் கூட்டணி ஆட்சி பாகுபாடு முறையை மேம்படுத்துவதில் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கும் செயல் திட்டத்தை மேற்கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *