ஜேஇஇ நுழைவுத்தேர்வு தற்காலிகமாக நிறுத்தம்… கல்வித்துறை மந்திரி தகவல்….!!

 கொரோனா நோய் பரவல் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த ஜேஇஇ நுழைவுத்தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும், பொருளியலாளர்களையும் உருவாக்க இக்கழகம் உருவாகின. இதனை ஐஐடி எனவும் இவற்றில் படித்தவர்களை ஐஐ.டியர் எனவும் விளக்கப்படுகிறது. இப்போது இந்நிறுவனம் 13 தன்னாட்சி பெற்ற கல்விக் கூடங்களாக திகழ்கிறது. உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி களில் மாணவர்களின் சேர்க்கைகாக ஒவ்வொரு ஆண்டும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த தேர்வு இந்த ஆண்டு முதல் 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இதன்படி முதல் 2 தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடந்து முடிக்கப்பட்டது. மீதமுள்ள 2 கட்ட தேர்வுகள் ஏப்ரல் 27,28 மற்றும் 30 தேதிகளில் நடக்க இருந்த நிலையில், கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதால் இதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அதன்பின் மே மாதம் நடக்க இருந்த ஜேஇஇ  முதன்மை தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும், மறு தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே அறிக்கை வெளியிடப்படும் எனவும் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *