அடேங்கப்பா…!! ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா…?

ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் இந்தி நடிகை கங்கனா ரணாவத்_துக்கு 24 கோடி சம்பளம் வழங்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்  விஜய் . இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும்  “தலைவி” என்கின்ற தலைப்பில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இருக்கும் நடிகை கங்கனா ரணாவத் இந்தி படமான குயின் படத்தில் தேசிய விருது பெற்றவர்.

இந்நிலையில்  இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூபாய் 24 கோடி சம்பளம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லபடுகின்றது . சினிமாவில் எந்த ஒரு நடிகையும் இவ்வளவு அதிகமான சம்பளம் வாங்கியது இல்லை. தற்போது கங்கனா ரணாவத்  “பங்கா” என்ற இந்தி படத்தில் நடித்து வருகின்றார். மேலும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பிரியதர்ஷினி “த ஐயன் லேடி” என்ற பெயரில் தயாரித்து வருவதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.