ஜெயலலிதா மரணம் வழக்கு…. மருத்துவர்களிடம் இன்று மீண்டும் விசாரணை….!!!

ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவர்களிடம் மீண்டும் இன்று விசாரணை. 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இந்த விசாரணையில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், தனியார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், முன்னாள் அமைச்சர்        சி. விஜயபாஸ்கர் உள்பட 154 பேரிடம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த  தனியார் மருத்துவமனை விசாரணையின் போது தாங்கள் கூறும் சாட்சியும், தரவுகளும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால் மருத்துவ குழு அமைக்கப்பட்ட அதன் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் தலைமையில் எய்ம்ஸ் மருத்துவமனை குழு அமைத்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் 6 பேர் கொண்ட குழு உதவியுடன் ஆறுமுகசாமி தலைமையில் முதலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *