ஜவான் மற்றும் பேரரசு ஒரே கதையா….? தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரின் அதிரடி விளக்கம்?….!!!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் பாலிவுடில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் கதையும் விஜயகாந்த் நடித்த பேரரசு திரைப்படத்தின்‌ கதையும் ஒன்றுதான் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை குறித்து ஷாருக்கான் நிறுவனம் கூறியதாவது, ” ஜவான் படத்தினுடைய கதையும், பேரரசு திரைப்படத்தினுடைய கதையும் ஒன்று இல்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பேட்டி அளித்துள்ளார்” என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply