“மன் கட்” முறையில் ஆட்டமிழந்ததற்கு வாய் திறந்த ஜாஸ் பட்லர்….!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் “மன் கட்” முறையில் ஆட்டமிழந்ததற்கு முதல் முறையாக வாய் திறந்து ஜாஸ் பட்லர் பதிலளித்துள்ளார்.  

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்  கடந்த 25-ந் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியின் போது இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர்  அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த நிலையில் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது என்ன வென்றால் அஸ்வின் 13 வது ஓவரை வீசினார். அப்போது  ஜாஸ் பட்லர்  ரன்னர் திசையில் நின்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த ஓவரின் 5ஆவது   பந்தை அஸ்வின்  வீசும் போது  பட்லர் க்ரீஸை விட்டு வெளியே நகர்ந்தார்.  அப்போது அஸ்வின் “மன்கட்”  முறையில் ஜோஸ் பட்லர் 69 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் செய்தார்.  ரன்னர் க்ரீஸை விட்டு  வெளியே வந்தால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் இருக்கிறது.

Image result for JOSBUTLER IPL 2019

ஆனால் அஸ்வின்  செய்த இந்த ரன் அவுட்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அஸ்வின்  செய்தது தவறு அவர் கிரிக்கெட்டை அசிங்கப் படுத்தி விட்டார் என்று சமூக வலை தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விஷயத்தில் அஸ்வின்  அவுட் செய்தது விதிப்படி சரி தான் என்றும், அஸ்வினின் செயல்பாடு விளையாட்டு உத்வேகத்துக்கு எதிரானது என்றும் இரண்டு விதத்திலும்  கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. அஸ்வின் “மன் கட் முறையில்  ‘ரன்-அவுட்’ செய்தது சரியானதே என்று முதலில் கருத்து தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் விதிகளை வகுப்பதில் முக்கிய பங்கும் வகிக்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.), அடுத்த நாளில் அஸ்வினின் செயல் விளையாட்டு உத்வேகத்துக்கு உகந்ததாக இல்லை என்று தலை கீழாக மாறியது.
Image result for JOSBUTLER IPL 2019

இந்த நிலையில் ‘ரன்-அவுட்’ குறித்து ஜோஸ் பட்லர் முதல்முறையாக மவுனத்தில் இருந்து வெளியேறி  அதுபற்றி பேட்டி அளித்துள்ளார். அப்போது  அவர் பேசியதாவது மன்கட் ‘ரன்-அவுட்’ முறை கிரிக்கெட் விதிகளில் இருக்க வேண்டியது அவசியம் தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால்  இந்த விதிகளில் சில குறைபாடு இருக்கிறது.  பவுலர் பந்தை  வீசுவதற்கு முன்பாகவே  பேட்ஸ்மேன் ஆடுகளத்தில் பாதி தூரம் ஓடிவிடாமல் இருக்க தான் இந்த விதி. ஆனால்   பந்து வீசுபவர் பந்தை கைகளில் இருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்க்கும் நிலையில்  பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறினால் அவுட் செய்யலாம் என்று கூறப்பட்டு இருப்பதில் தெளிவான வரைமுறை இல்லை. எனவே இந்த விதிமுறையில் உள்ள குழப்பத்துக்கு தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும் என்றார்.

Image result for JOSBUTLER IPL 2019

மேலும் நான்  ரன்-அவுட் செய்யப்பட்ட  வீடியோ காட்சியை பார்த்தால் அதில் தெளிவாக தெரியும் அது தவறான முடிவு அளிக்கப்பட்டதாகும்  என்றார்.  பவுலர் பந்தை கையை விட்டு விடுவிப்பார் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் நான் எல்லை கோட்டிட்குள்  தான் இருந்தேன். அப்படி இருக்கும் சமயத்தில்  ‘ரன்-அவுட்’ வழங்கப்பட்டது எனக்கு உண்மையிலேயே மிகுந்த ஏமாற்றம் அளித்தது. அந்த நேரத்தில் அஸ்வின் நடந்து கொண்ட செயலை நான் விரும்பவில்லை. இந்த ஐபிஎல் போட்டி  தொடரின் தொடக்கத்தில் நடந்த இந்த சம்பவத்தினை நான் ஒரு தவறான முன்னுதாரணமாக கருதுகிறேன். இந்த விரும்பத்தகாத சம்பவத்தால்  சில நாட்கள் என்னால் ஆட்டத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை சற்று  கடினமாக இருந்தது. இதுபோன்ற சம்பவம் இனிமேலும்  எனக்கு நடைபெறாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *