வரலாற்றில் இன்று ஜனவரி 13…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 13

கிரிகோரியன் ஆண்டு : 13_ ஆம் நாளாகும்

நெட்டாண்டு : 353_ ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு : 352_ நாட்கள் உள்ளன

 

இன்றைய தின நிகழ்வுகள்:

1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.

1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1815 – கண்டிப் போர்கள்: பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.[1]

1830 – லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.

1840 – அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர்.

1842 – முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் என்ற மருத்துவர் மட்டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார்.

1847 – கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

1849 – வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானது.

1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டனில் நிறுவப்பட்டது.

1893 – அமெரிக்க கடற்படை, அவாய், ஒனலுலுவில் தரையிறங்கியது.

1908 – பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர்.

1910 – முதலாவது நேரலை வானொலி ஒலிபரப்பு நியூயார்க் நகரில் இடம்பெற்றது.

1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர்.

1930 – மிக்கி மவுஸ் சித்திரங்கள் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.

1938 – இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.

1939 – ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் உயிரிழந்தனர்.

1942 – ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1950 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றுடன் மோதியதில் 64 பேர் உயிரிழந்தனர்.

1963 – டோகோவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சில்வானுசு ஒலிம்பியோ கொல்லப்பட்டார்.

1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1972 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமரும், அரசுத்தலைவரும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்கள்.

1982 – வாசிங்டனில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்.

1985 – எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் உயிரிழந்தனர்.

1986 – தெற்கு யேமன், ஏடன் நகரில் ஒரு மாதமாக இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1991 – சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.

1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக சப்பான் மன்னிப்புக் கோரியது.

1993 – வேதி ஆயுத உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1998 – தற்பாலினர் வெறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அல்பிரெடோ ஓர்மண்டோ என்பவர் புனித பேதுரு சதுக்கத்தில் தீக்குளித்து இறந்தார்.

2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.

2006 – சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.

2012 – இத்தாலியப் பயணிகள் கப்பல் கொஸ்டா கொன்கோர்டியா கடலில் மூழ்கியதில் 32 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்:

1858 – ஆஸ்கர் மின்கோவஸ்கி, லித்துவேனிய-செருமானிய உயிரியலாளர் (இ. 1931)

1864 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1928)

1879 – மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தைத் தோற்றுவித்த அமெரிக்கர் (இ. 1961)

1887 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், உருசிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1949)

1889 – வசீலி பெசென்கோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 1972)

1906 – சூ யூக்வாங், சீன மொழியியலாளர் (இ. 2017)

1911 – எம். ஜி. சக்கரபாணி, இந்திய நாடக, திரைப்பட நடிகர் (இ. 1986)

1911 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)

1913 – செ. அச்சுத மேனன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி, கேரள முதலமைச்சர் (இ. 1991)

1922 – ஏரம்பு சுப்பையா, ஈழத்து பரத நாட்டியக் கலைஞர் (இ. 1976)

1946 – ஆர். பாலச்சந்திரன், தமிழகக் கல்வியாளர், கவிஞர் (இ. 2009)

1949 – ராகேஷ் சர்மா, இந்திய விண்வெளி வீரர்

1960 – எரிக் பெட்சிக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்

1977 – ஆர்லாந்தோ புளூம், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1978 – நேட் சில்வர், அமெரிக்க ஊடகவியலாளர், புள்ளிவிபரவியலாளர்

1983 – இம்ரான் கான், இந்திய நடிகர்

1990 – லியம் எம்சுவர்த், ஆத்திரேலிய நடிகர்

இன்றைய தின இறப்புகள்:

1717 – மரியா சிபில்லா மெரியன், செருமானியப் பூச்சியியலாளர் (பி. 1647)

1906 – அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர் (பி. 1859)

1941 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1882)

1977 – என்றி லங்லொவைசு, துருக்கிய-பிரான்சிய வரலாற்றாளர் (பி. 1914)

2013 – கனகசபை சிவகுருநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1920)

2014 – அஞ்சலிதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927)

2015 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1930)

2016 – ஜி. ஏ. வடிவேலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925)

2016 – ஜெ. எப். ஆர். ஜேக்கப், இந்தியத் தரைப்படைத் தளபதி (பி. 1923)

இன்றைய தின சிறப்பு நாள்:

சனநாயக நாள் (கேப் வர்டி)

உலோகிரி (பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம்)

விடுதலை நாள் (டோகோ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *