ஜம்மி நிஷம் பந்து வீச்சில் திணறும் ஆப்கான்…!!

ஜம்மி நிஷம்மின் அசத்தல் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகின்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 13_ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும்  ஆப்கானிஸ்தான் மோதியது. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்கு டெளன்டன் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய  ஆப்கானிஸ்தான்  அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா மற்றும் நூற் அலி ஜத்றான்  களமிறங்கினர்.
Image

பொறுமையாக ஆடிய இந்த தொடக்க ஜோடி 66 ரன்னில் ஜம்மி நீஷம் பந்து வீச்சில் முறிந்தது. இதையடுத்து அடுத்தடுத்து நூற் அலி ஜத்றான் , ரஸ்மத் ஷா , குல்பெட்டின் நைப் , முஹம்மத் நபி , நஜிபுல்லா ஸ்ட்ரான் ஆகியோர்  அடுத்தடுத்து பெவிலியனை நோக்கி நடையை கட்டினர் . ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் 84 ரன் இருந்த போது மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

Image

தற்போது ஆப்கானிஸ்தான் 29.2 ஓவர்களில் 6  விக்கெட்களை இழப்பிற்கு 126  ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் சார்பில்  ஷில்மாடுல்லா ஷிஷிடி36 ரன்னுடனும் , விக்ரம் பாலிசி 0 ரன்னுடனும் ஆடி வருகின்றனர். நியூசிலாந்து அணி சார்பில் ஜம்மி நிஷம் 5 விக்கெட்டையும் ,லட்சி பெர்குசன் 1 விக்கெட்டும்  வீழ்த்தியுள்ளனர்.