ஜல்லிக்கட்டை அங்கீகரிக்கவில்லை… மக்களவையில் விளையாட்டு அமைச்சகம் பதில்…!!!!!!

ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற போட்டிகளை அங்கீகரிக்கவில்லை என மத்திய விளையாட்டு அமைச்சகம் மக்களவையில் கூறியுள்ளது. இது குறித்து மக்களவையில் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூறியதாவது, மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளை அங்கீகரிக்கவில்லை. ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. கேலோ இந்தியா போன்ற எந்த   திட்டத்தின் கீழும் அங்கிகரிக்கவில்லை எந்த திட்டத்திலும் ஜல்லிக்கட்டு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.