ஜெயம் ரவி 26_ஆவது படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர்கள்….!!

ஜெயம் ரவியின் 26_ஆவது படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர்கள் ஐயங்கார் மற்றும் சுர்ஜித் போன்றோர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கோமாளி. பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களின் இயக்குனர் லட்சுமணன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஜெயம்ரவியின் 25வது படமான இந்தப் படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரிக்கிறது.

 

இதன் பிறகு இயக்குனர் ஹமத் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர்கள் ஐயங்கார் மற்றும் சுர்ஜித் போன்றோர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் புகழ்பெற்ற பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவதி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து உள்ளனர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *