திமுகவினர் அன்பழகனையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்…. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் பேச்சு..!!

பேரவையில் இன்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்களை நினைவில் கொள்ளுமாறு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்து பேசினார்.

சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேசத் தொடங்கும் முன்பு கலைஞர்,திமுக தலைவர் ஸ்டாலின்,இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பேசத் தொடங்குவது வழக்கம்.

இதனை தொடர்ந்து இன்று செய்தித் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்ட மன்ற உறுப்பினர் தாயகம் கவி உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். அப்போது, குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார்  அனைவரையும் வாழ்த்தும் திமுகவினர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிக பெரிய பேராசிரியர் அன்பழகனையும் சிறிது நினைவில் வைத்து கொள்ளவேண்டும் என கிண்டலாக பேசினார்.