“ஜான் விக்” பட நடிகர் திடீர் மரணம்….. திரையுலகினர் இரங்கல்…. சோகம்…..!!!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல படங்களில் ஒன்று “ஜான் விக்”. சென்ற 2014-ம் வருடம் Keanu Reeves நடிப்பில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியானது. இதையடுத்து 2017-ம் ஆண்டு 2ஆம் பாகமும், 2019ஆம் ஆண்டு 3-ம் பாகமும் வெளிவந்தது. தற்போது இந்த படத்தின் 4-ஆம் பாகம் வருகிற 24ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் Charon எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் Lance Reddick.

இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக 60 வயதாகும் நடிகர் Lance Reddick மரணம் அடைந்துள்ளார். இவரது இறப்புக்கு ரசிகர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஜான் விக் படம் மட்டுமல்லாமல் Resident Evil, The Wire, Lost, Bosch போன்ற படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply