என்ன பாலாவுடன் சண்டையா….? சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவசரமாக கிளம்பி சூர்யா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில் OTTயில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான டெஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் பாலா இயக்கத்தில்  சூர்யா நடிப்பில் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா மீனவராக நடிப்பதாகவும் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில்  நடைபெற உள்ளதாகவும் பின்பு படக்குழுவினர் கோவாவுக்குசெல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் சூர்யா அவசரமாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியேறிவிட்டதாக தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது சமீபத்தில் பாலா சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சூர்யா “சூரரை போற்று” திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் பணிகளுக்காக மும்பை கிளம்பியுள்ளார். இதனால் பாலாவுடன் சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறியதாக வதந்திகள் பரவி வருகின்றன.

இதற்கிடையில் சூர்யா, பாலா இடையில் மோதல் ஏற்பட்டதாக வெளிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  படக்குழுவினர் கூறுகையில், “‘சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டப் பணிகள் முடிந்து உள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் 15 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *