இன்னும் 11 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை மேற்கொள்ள விஞ்சானிகள் மேற்கொள்ளும் யுக்திகள் குறித்து காண்போம்:
இப்பொழுது விக்ரம் லேண்டர் நிலவில் எங்கே லேண்ட் ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அதற்கு அருகிலேயே சாய்ந்த நிலையில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விக்ரம் லேண்டர் இரண்டு விதமான சப்ளை செய்து வருகிறது. ஒன்று அதன் வெளிப்புறத்தில் சோலார் பேனல்கள் சூரிய கதிர்கள் அதன் மேல் விழும் பொழுது அது ஒரு மின்சார ஆற்றலை வெளிப்படுத்தும். இரண்டாவது அதனுள்ளேயே self power என்று அழைக்கப்படும் அதிக பவர் கொண்ட பேட்டரி உள்ளே பொருத்தப்பட்டுள்ளது.

நிலவில் மோதும் பொழுது அதன் உள்பகுதியில் சேதமடைந்துள்ளதா? அல்லது வெளிப்பகுதியில் சேதமடைந்துள்ளதா? என்பது தெரியவில்லை. தற்போது வரை விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு முயற்சிகள் என்னவென்றால், பெங்களூர் அருகில் இருக்க கூடிய ஸ்பேஸ் ஸ்டேஷன்லிருந்து 32 மீட்டருக்கு மிகப்பெரிய ஆண்டனா வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டனாவை வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டது.
இதையடுத்து புதியதாக அந்த நிலவை சுற்றி கொண்டிருக்கும் ஆர்பிட்டர் மூலம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 14 நாட்கள் அதனை மீட்க கால அவகாசம் இருந்தநிலையில் 3 நாள் முடிந்து இன்னும் 11 நாட்கள் மீட்டெடுப்பதற்கான நேரம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்குள் கண்டிப்பாக அதனுடன் தொடர்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அப்படி நடந்துவிட்டால் மொத்த சந்திராயன்-2 ப்ராஜெக்ட் வெற்றிதான். இந்த விக்ரம் லேண்டர் தொடக்கத்தில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நிலவை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது. ஆனால் நிலவில் தரையிறங்கும்போது soft லேண்டிங் டெக்னிக்கை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தினால் 0.6 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு அதன் வேகம் குறைக்கப்பட்டது.
இந்த முயற்சியை மேற்கொள்ளும் பொழுது விக்ரம் லேண்டரில் கோளாறு ஏற்பட்டு 2 கிலோ மீட்டருக்கு முன் நாம் அடைய வேண்டிய சாதனை தற்காலிகமாக தடைபட்டது. இஸ்ரோவின் தொடர் முயற்சிகள் வெற்றியடைந்து லேண்டருடன் தொடர்பு பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்களுடன் நாமும் பிராத்தனை செய்து கொள்வோம்.