இது சரியான நேரம் அல்ல… காங்கிரஸ் தேர்தல் ஒத்திவைப்பு… குழு உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முடிவு…!!

கொரோனாவின் தாக்கம் குறைவும் வரை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை தள்ளிவைக்க கட்சி உறுப்பினர்களால் ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து கட்சி தலைவராக இருந்த ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து இடைக்கால தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் சோனியா காந்தி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டிற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் தேர்வு செய்யவேண்டிய வேண்டுமென காங்கிரஸ் காரியக் கமிட்டி மத்திய தேர்தல் குழுவிடம் கடந்த ஜனவரி மாதம் கோரிக்கை வைத்துள்ளது.

இதனைதொடர்ந்து மதுசூதனன் மிஸ்திரி தலைமையிலான தேர்தல் குழு இந்த  கோரிக்கையை ஏற்று வருகின்ற ஜூன் 23ஆம் தேதி காங்கிரஸில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தற்போது  கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தலைவருக்கான தேர்தல் நடத்துவது சரியான முடிவு அல்ல என கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தகைய கடினமான சூழ்நிலையில் தலைவருக்கான தேர்தல் நடத்தக்கூடாது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தலை தள்ளிவைக்க குழு உறுப்பினர்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *