“இதை பத்தி கண்டிப்பா பேசுவோம்” …. ரிஷப் பண்ட் குறித்து ராகுல் டிராவிட் பேச்சு ….!!!

இந்தியா- தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில்  7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது.

இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரி‌ஷப் பண்ட் விளையாடிய விதம் விமர்சிக்கப்பட்டு வருகின்றது .அப்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்னில் 4 விக்கெட் இழந்த போது ரி‌ஷப் பண்ட் களமிறங்கினார்.அவருடன் ஹனுமன் விகாரி ஜோடி சேர்ந்தார். அப்போது ரிஷப் பண்ட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதுவும் தவறான ஷாட் தேர்வினால் அவர் அவுட் ஆனார்.

அதேசமயம் அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தபோது பண்ட் அடித்து ஆட முயற்சித்து ஆட்டமிழந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இதுகுறித்துக் கூறுகையில்,” ரிஷப் பண்ட் விளையாடிய விதம் பற்றி விவாதிக்கப்படும். மேலும் அவருடன் சில உரையாடல்கள் செய்யப்போகிறோம் .அதோடு அவருடைய ஷார்ட் தேர்வு குறித்து விவாதிக்க உள்ளோம்.மேலும்  ரிஷப் பண்ட் விளையாட்டின் போக்கை மிக விரைவில் மாற்று மாற்றக்கூடியவர்”இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *