என் வாழ்க்கையில் இது மைல்கல்லாக இருக்கும்… வாய்ப்புக்கு மிக்க நன்றி… சாண்டியின் மகிழ்ச்சி பதிவு…!!!

லோகேஷ் கனகராஜூடன் சாண்டி மாஸ்டர் எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதே போல் டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டரா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் “வாய்ப்புக்கு மிக்க நன்றி சார்.
கமல்ஹாசன் சார் உடன் விக்ரம் திரைப்படத்திற்காக வேலை செய்வது ஒரு நடன இயக்குனராக என் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும். உங்களுடன் பணிபுரிவது ஒரு அற்புதமான கற்றல் அனுபவம். லவ் யூ தல. ஒன்றாக மேலும் திரைப்படங்கள் மற்றும் நினைவுகளை உருவாக்க வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *