தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில்  வெளியான பகவான் தாதா என்ற திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவருக்கு தற்போது 51 வயது ஆகிறது. இவர் சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்று கலந்து கொண்டு தனது சிறுவயதில் ரஜினியுடன் நடித்த அனுபவத்தை குறித்து பேசி இருந்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ரஜினியுடன் நடித்த போது அவர் இவ்வளவு பெரிய லெஜெண்ட் என்று எனக்கு தெரியாது. நான் ஒரு முட்டாளாக இருந்தேன், என்னை பொறுத்தவரை அவர் ரஜினி அங்கிள் எனக்கு தோன்றிய மாதிரி தான் அவரிடம் பேசுவேன். இன்று அவருடன் நான் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் ரொம்ப வித்தியாசமானவனாக இருப்பேன். அந்த மாதிரி ஒரு நடிகருடன் சேர்ந்து நடிப்பது பெரும் சுமையாக இருக்கும், நாங்கள் சேர்ந்து நடிக்கும் போது நான் ஏதாவது தவறு செய்தால் இயக்குனர் கட் சொல்லுவார். உடனே ரஜினி அவர் தப்பு செய்த மாதிரி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்பார். ஒவ்வொரு முறையும் நான் தப்பு செய்யும் போது நான் பதற்றம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ரஜினி அந்த பழியை ஏற்றுக்கொண்டார் என்று அவர் கூறினார்.