ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சி… அதுக்கப்பறம் பழகிடுச்சி- ஸ்ருதி ஹாசன்..!!

சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய்சேதுபதிக்கு  ஜோடியாக தமிழில் ’லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்த போது குண்டாகி விட்டார் என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு அது பெரிதாக தெரியவில்லை.
Image result for laabam movie
சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், குண்டாகிவிட்டார் என்று தேவையில்லாமல் சொல்வது எனக்கு வருத்தமாக இருந்தது. எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என்னை கவனித்துக் கொள்ளவில்லை.
Related image
எனக்கு அன்பு, அமைதி தேவைப்பட்டது. விமர்சனங்கள் என்னை பாதிப்பது இல்லை. ஏனென்றால் அனைவருக்கும் அவரவர் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொண்டுள்ளேன். பாலிவுட்டில் ஒரு நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக  நடிப்பேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *