நன்றி சொல்ல இவ்ளோ லேட்டா… கடுப்பாகி குடைச்சல் கொடுத்த பாஜக… டோட்டலா குளோஸ் செய்த நிதிஷ் …!!

பீகார் மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயிச்ச நாள் தொடங்கி, நிதிஷ்குமார் – பாஜவுக்குமான இந்த விரிசல், இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது.  ஏனென்றால் தேர்தல் வெற்றிக்கு பிறகு 22 மணி நேரம் கழித்து தான் திரு மோடிக்கு நிதிஷ் நன்றி தெரிவிக்கிறார்.

அதிலே நிதிஷ்குமாருக்கும் – பாஜவுக்குமான இடைவெளி கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. சபாநாயகர், துணை முதல்வர், முக்கியமான இலாகாக்கள் இதை பகிர்ந்து கொண்டதில் பாஜக மீது கடும் அதிருப்தி தொடக்கத்தில் இருந்தே நிதிஷ்குமாருக்கு இருந்தது.

பாஜக தலைவர்கள் தொடர்ந்து நிதிஷ்குமார் அரசின் மீதான விமர்சனங்களையும் முன்வைத்துக் கொண்டே இருந்தார்கள். உத்தரபிரதேசம் மாடல் மாறி இங்கு ஆட்சி அமைக்க வேண்டும். அங்கே யோகி எப்படி சட்டம் ஒழுங்கை புல்டோசர் பயன்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்கிறார்களோ,  அதே மாதிரியான மாடல் இங்கு இருக்க வேண்டும்,  பீகாரில் இருக்க வேண்டும் அப்படி எல்லாம் பாஜக தலைவர் தொடர்ந்து வலியுறுத்தியின்றார்கள், கடும் எதிர்வினை ஆற்றினார்கள்.

நிதிஷ்குமார் கட்சியும் பாஜகவின் விமர்சனங்களுக்கு கடும் எதிர்வினை ஆட்சியது. இங்கு இருக்கும் நிதிஷ் மடல், ரொம்ப நல்ல மாடல். அதனால அந்த மாதிரியான மாடல் தொடரட்டும் அப்படி என சொன்னாங்க. சட்டமன்றத்தையே நிதிஷ்குமார் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தார்கள். சபாநாயகர் மீது கடும் அதிருப்தியில் இருந்தார்கள். மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தால் பீகாரில் மிகப்பெரிய வன்முறையாக,  கலவரமாக மாறுகின்றது நிதிஷ்குமார்  கடிதம் எழுதுகிறார்.

மத்திய பாஜக அரசு  நிதிஷ் கூட்டணி கட்சியில் இருக்கின்றார்கள். இந்த திட்டத்திற்கு ஆதரவு நித்திஷ் கொடுப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்புகின்றார். நிதி ஆயோ கூட்டத்தை புறக்கணித்தார். குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு  பதவி ஏற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார். ராம்நாத் கோவிந்த வழியனுப்புற நிகழ்ச்சியை புறக்கணித்தார். மத்திய அரசு தொடர்ந்து அழைத்த கூட்டங்களுக்கு நிதிஷ்குமார் போகாமல் புறக்கணித்து கொண்டிருந்தார். அந்த இடைவெளி அதிகமாகி, தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *