தகவல் பரிமாற்றத்தால் நடக்கக் கூடாது நடந்து விட்டது என்று திருச்சி சிவா எம்பி-ஐ சந்தித்த பின் அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார். திருச்சியில் இறகு பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி சிவா எம்பி பெயர் விடுபட்டதால் ஏற்பட்ட பிரச்சனையில் திருச்சி சிவா வீடு தாக்குதலுக்கு ஆளானது. உட்கட்சி பூசல் காரணமாக கே என் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி சிவா இல்லத்திற்கு அமைச்சர் கே என் நேரு அவரை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக நிர்வாகிகள் நடந்த நிகழ்வு குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கே என் நேரு குறிப்பிட்டார். சிவாவிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் நடக்கக் கூடாது நடந்து விட்டது என்று கே.என்.நேரு குறிப்பிட்டார்.