விலை வாசியை கூடாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை… துரைமுருகன் கருத்து..!!

விலைவாசி கூடும் நிலை ஏற்பட்டாலும் அதனை கூட விடாமல் பார்த்து கொள்வது அரசின் கடமை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் பாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Image result for துரைமுருகன்

தொடர்ந்து பாலின் விலை உயர்த்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், எந்த பொருளின்  விலைவாசி கூடினாலும் பொதுமக்கள் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்படுவார்கள். விலைவாசி கூடத்தான் செய்யும் ஆனால் அதனைக் கூட விடாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.