காந்தியை சுட்டதில் தவறில்லை “கமலை நடமாட விட மாட்டோம்” செண்பக மன்னார் ஜீயர் சர்ச்சை கருத்து…!!

காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை நடிகர் கமலை நடமாட விடப்போவதில்லை என்று செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது  நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த சர்சை  பேச்சுக்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும்  இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கமல் மீது  அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த  மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்  கூறுகையில் , மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ISIS தீவிரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு  இந்துக்களுக்கு விரோதமாக பேசியுள்ளார். கமல்ஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார். அவரை  நடமாட விடப் போவதில்லை. அவரை மன்னிக்கப் போவதில்லை. காந்தியை கோட்சே சுட்டதில் எந்த தவறுமில்லை.  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய கோரி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *