“இது தற்செயலாக நடக்கவில்லை”… ஏதோ காரணத்தால் “18” என்னை ஒட்டிக்கொண்டது… விராட் கோலி…!!!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவர் ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் மேட்சில் 1205 நாட்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தினார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில்‌ இணைந்து ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் கோலி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலி 18 எண் கொண்ட ஜெர்சியை தான் விரும்பி பெறவில்லை எனவும் அது தானாகவே தனக்கு அமைந்துவிட்டது எனவும் தற்போது கூறியுள்ளார்.

முதன்முதலாக விராட் கோலி U-19க்கு விளையாடும் போது 18-வது நம்பர் கொண்ட ஜெர்சியை விராட் கோலிக்கு கொடுத்துள்ளனர். அதன்பிறகு விராட் கோலி முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தேதி ஆகஸ்ட் 18. அவருடைய தந்தை மறைந்த தேதி 18. இது எல்லாம் தற்செயலாக நடந்தது இல்லை. ஏதோ காரணத்தால் 18 என்ற நம்பர் என்னை ஒட்டிக்கொண்டது என்று விராட் கோலி கூறியுள்ளார்.