தொழுகைக்கு வந்த இடத்தில்…. பலியான பாலஸ்தீனியர்…. அதிரடியில் இஸ்ரேல் பாதுகாப்பு போலீசார்….!!!!

இஸ்ரேல் நாட்டில் ஜெருசலேம் நகரில் அல் அக்ஸா என்ற மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் நேற்று முன்தினம் புனித ரமலான் மாதத்தை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மசூதியின் நுழைவாயிலில் செயின் கேட் பகுதியில் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த இஸ்ரேல் போலீசாரிடம் இருந்து பாலஸ்தீனியர் ஒருவர் துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.

உடனடியாக இஸ்ரேல் போலீசார் சுதாரித்துக் கொண்டு பாலஸ்தீனியரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பாலஸ்தீனியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.