இஸ்ரேல் படையினரின் அதிரடி சோதனை…. அல்-அக்சா பிரிகேடிஸ் இயக்கத்தில் மூவர் பலி…!!!

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் அல்-அக்சா பிரிகேடிஸ் அமைப்பினுடைய தளபதி உட்பட 3 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே பல வருடங்களாக கடும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இரு தரப்பினரும் அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் அல்-அக்சா பிரிகேடிஸ் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது.

கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில், நப்லஸ் நகரத்தில் இஸ்ரேல் அமைப்பினர் இன்று அதிகாலையில் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களை குறிவைத்து துப்பாக்கி சுடுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தரப்பினரும் தாக்குதல் நடத்தினர். எனவே, பல மணி நேரங்களாக இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்தது. இதில், அல்-அக்சா பிரிகேடிஸ் அமைப்பில் மூன்று நபர்கள் உயிரிழந்தார்கள். மேலும் 40 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *