இஸ்ரேல் வான்வழி தாக்குதலில்… கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் பலி… சோகம்..!!

ஜெருசலம் பகுதியை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சௌமியா என்பவர் காஞ்சி பஞ்சாயத்தின் முன்னாள் உறுப்பினரான சதீஷ் என்பவரின் மகளாவார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த சூழலில் இவர் இஸ்ரேல் நாட்டின் கவனிப்பாளார் வேலையில் 10 ஆண்டாக பணியாற்றிவருகிறார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு கேரளாவிற்கு வருகை தந்தார். அதன் பின் இஸ்ரேல் திரும்பி தனது பணியை தொடங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3.45 மணி அளவில் தனது கணவர் சந்தோஷ் உடன் பணியிடத்தில் இருந்து வீடியோ காலில் பேசியுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சூழலில் சௌமியா இருந்து அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது ராக்கெட்டுகள் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த குடியிருப்பில் இருந்த பலரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இதை இஸ்ரேலில் வசிக்கும் சௌமியாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உறுதி செய்தனர். இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநில அரசு சார்பிலும் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன இடையேயான மோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *