“இரக்கமின்றி முஸ்லீம் குடும்பத்தினரை கொன்ற இளைஞர்!”.. வெளியான புகைப்படம்..!!

கனடாவில் முஸ்லீம் குடும்பத்தினர் மீது தெரிந்தே வேன் ஏற்றி கொன்ற இளைஞரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

கனடாவிலுள்ள ஒன்ராறியோவில் இருக்கும் லண்டனில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது Nathaniel Veltman என்ற 20 வயது இளைஞர் தன் வாகனத்தை எடுத்துச்சென்று, அவர்கள் மீது தெரிந்தே மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் Salman Afzaal – Madiha Salman என்ற தம்பதி, அவர்களின் மகள் Fayez Afzal மற்றும் Afzaal-ன் தாய் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் இக்குடும்பத்தில் உள்ள சிறுவன் Fayez Afzal பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொடூர தாக்குதல் குறித்து அறிந்தவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

மேலும் இது பயங்கரவாத தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் வேன் ஏற்றி அவர்களை கொன்ற Nathaniel Veltman-ன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவரை காவல்துறையினர் கைது செய்த போது அவர் சிரித்ததாக டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இதனிடையே Nathaniel உடன் பணியாற்றிய ஒரு இஸ்லாம் நண்பர் கூறுகையில், அவர் மிக நல்ல மனம் உடையவர். யாராவது கேட்டால் தான் போட்டுள்ள சட்டையையும் கழற்றி கொடுக்க கூடியவர். மேலும் அவர் முஸ்லீமான தன்னிடம் எந்தவிதமான வெறுப்பையும் காட்டமாட்டார் என்று கூறியிருக்கிறார். தற்போது அவர் மீது கொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கொலை முயற்சி போன்றவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *