ஐஎஸ்எல் கால்பந்து : கிரெக் ஸ்டீவர்ட் அசத்தல் ஆட்டம் ….! ஒடிசாவை பந்தாடியது ஜாம்ஷெட்பூர்….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி அபார வெற்றி பெற்றது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஒடிசா-ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் போட்டியின் 3-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் பீட்டர் ஹார்ட்லி முதல் கோல் பதிவு செய்தார் .

இதன்பிறகு ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கிரெக் ஸ்டீவர்ட் 4-வது ,21-வது மற்றும் 35-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார் . இதனால் 4-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி முன்னிலையில் இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  ஒடிசா அணி கோல் அடிக்க எடுத்து  முயற்சிகள் அனைத்தும் வீணானது. இதனால் 4-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *