ஐஎஸ்எல் கால்பந்து : பெங்களூரு – மோகன் பகான் மோதிய ஆட்டம் டிரா ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த பெங்களூரு – ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ..இதில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் பெங்களூரு – ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியது.

இதில் பெங்களூரு அணியில் கிலெய்ட்டன் சில்வா 18 வது நிமிடத்திலும், டேனிஷ் பரூக் பட் 26-வது நிமிடத்திலும் , பிரின்ஸ் 72-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார் .அதேபோல்  மோகன் பகான் அணியில் சுபாசிஷ் போஸ் 13-வது நிமிடத்திலும் , ஹியூகோ 38-வது நிமிடத்திலும் , ராய் கிருஷ்ணா 58-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது .இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *