ஐஎஸ்எல் கால்பந்து :ஏ.டி.கே. மோகன் பகானை வென்றது ஜாம்ஷெட்பூர் அணி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த  ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது .

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் -ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .

இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது .இதன்மூலம் ஜாம்ஷெட்பூர் அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது .இதனிடையே இன்று இரவு 7.30  மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- கோவா அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *