ஐஎஸ்எல் கால்பந்து : 2-வது வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி …..!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி வெற்றி பெற்றது .

11 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இதில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட்  யுனைடெட் அணியை தோற்கடித்து சென்னையின் எப்.சி. அணி 2-வது வெற்றியை ருசித்தது.

இதில் ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது .அப்போது 74-வது நிமிடத்தில் சென்னை அணியின் கேப்டன் அனிருத் தபா கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து வருகின்ற 3-ஆம் தேதி சென்னையின் எப்.சி அணி ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *