“இந்தியாவில் ISIS அமைப்பின் முதல் கிளை” ISIS பயங்கரவாத அமைப்பு தகவல் …!!

இந்தியாவில் ISIS பயங்கரவாத அமைப்பின் முதல் கிளை உருவாகியுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2013_ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள சிரியா நாட்டு அரசுப் படையை எதிர்த்து போரிட்ட அல்நுஸ்ரா முன்னணி என்கின்ற அமைப்பும், அல்கொய்தா அமைப்பின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ISIS  என்கின்ற புதிய பயங்கரவாத அமைப்பு உருவாகியது. இந்த பயங்கரவாத அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கடந்த 2014_ஆம் ஆண்டின்  தொடக்கத்தில்  ஈராக்கிற்குள் நுழைந்த ISIS  தீவிரவாதிகள் சுமார் 30 ஆயிரம் வீரர்களை தங்களது  இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் இருந்தார்கள்.

இந்த அமைப்பை உலகம் முழுவதும் விஸ்தரிக்கும் நோக்கத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலை நடத்தி வந்த இவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பு இலங்கையில்  நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்_ பேற்றுக்  கொண்டனர். இந்த கொடூர தாக்குதலில் சுமார் 300_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் வலியில் இருந்து இலங்கை இன்னும் மீளாத நிலையில் தற்போது இந்தியாவில் தகளது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலம் இருப்பதாகவும் , தங்களின் முதல் கிளையை தொடங்கியுள்ளதாகவும் ISIS அமைப்பினர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய உளவுத்துறை தீவிர விசாரணையை நடத்தி வருகின்றது.