ஐஸ்வர்யா வீட்டை அடுத்து அங்கேயும் திருடப்பட்டதா?…. வெளியான புது பரபரப்பு தகவல்… போலீஸ் தீவிர விசாரணை…!!!!

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன் வீட்டு லாக்கரிலிருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டு இருப்பதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் புகாரளித்திருந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதாவது ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் அவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.

அதன்பின் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். இதனிடையே ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்டதாக சொல்லப்பட்ட நகைகளை விட கூடுதலான நகைகளை அவரது வீட்டிலிருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரம் தனுஷ் மற்றும் ரஜினி வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்திருக்கிறார் ஈஸ்வரி. அப்போது இருவரது வீடுகளிலும் அவர் நகைகளை திருடி இருக்கலாமோ..? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுபற்றி ஈஸ்வரியிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.